பாபநாசம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்

பாபநாசம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-07-11 22:15 GMT
பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், மண்டல துணை தாசில்தார் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அதிகாரிகள் மகாராஜா, மணிமாறன், அன்பரசு, கார்த்திக், கிராம உதவியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நேற்று அதிகாலை பாபநாசம், திருப்பாலைத்துறை, பண்டாரவாடை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாபநாசம் அருகே மணல் ஏற்றி வந்த 8 மாட்டு வண்டிகளை வழிமறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குடமுருட்டி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது.

இதையடுத்து 8 மாட்டு வண்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த மாட்டு வண்டிகள் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பான மேல் நடவடிக்கைக்கு கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமாருக்கு, தாசில்தார் பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் செய்திகள்