உருவம் மாறும் தீவு

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் இருக்கும் லொக்டாக் ஏரியில் தாவரங்களால் உருவான மிதவை தீவு ஒன்று இருக்கிறது.

Update: 2018-07-12 21:15 GMT
200 கிலோமீட்டர் தூரத்திற்கு பரந்திருக்கும் இந்த மிதவை தீவில் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. ஆம்...! தாவரங்களால் உருவான தீவு என்றாலும் இது வலிமையானது. எப்படி தெரியுமா..? கொடி தாவரங்கள் ஒன்றாக பின்னி பிணைந்து, மண் தரை போன்ற கடினமான தரை தளத்தை உருவாக்கியிருக்கின்றன. அதனால் இந்த மிதவை தீவுகளில் மக்கள் சிறுசிறு வீடுகளை அமைத்து கொண்டிருக்கிறார்கள். வெயில் காலங்களில் ஒன்றாக சேர்ந்திருக்கும் இந்த மிதவை தீவு, மழை காலங்களில் சிறு சிறு தீவுகளாக பிரிந்துவிடுகின்றன. இவை மீண்டும் சேர்ந்து கொள்ளுமாம். 

மேலும் செய்திகள்