தூத்துக்குடி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட வக்கீல் வீட்டில் போலீசார் சோதனை

தூத்துக்குடி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட வக்கீல் வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

Update: 2018-07-12 21:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட வக்கீல் வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

வக்கீல் 

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22–ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது நடந்த கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரம் தொடர்பாக சிப்காட், தென்பாகம், மத்தியபாகம் போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில் சிப்காட் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த வக்கீல் அரிராகவனை போலீசார் தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து அவர் கோவில்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை சிப்காட் போலீசார் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையை முடித்து நேற்று தூத்துக்குடி 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

சோதனை 

அதேநேரத்தில் சிப்காட் போலீசார் தூத்துக்குடி குறிஞ்சிநகரில் உள்ள வக்கீல் அரிராகவன் வீட்டில் நேற்று மதியம் திடீர் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்