குடிநீர் குழாய் உடைந்ததால் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை

பரேலில் குடிநீர் குழாய் உடைந்தது. இதன் காரணமாக அங்குள்ள மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2018-07-13 00:17 GMT
மும்பை,

மும்பை பரேல் பாபாசாகிப் அம்பேத்கர் ரோட்டில் உள்ள மேம்பாலம் அருகே நேற்று காலை 6.30 மணியளவில் மாநகராட்சி குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி அந்த பகுதி வெள்ளக்காடானது.

தகவல் அறிந்து மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் குழாய் உடைந்த இடத்தில் பள்ளத்தை தோண்டி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக குடிநீர் குழாய் உடைந்ததால் அங்குள்ள பரேல் மேம்பாலம் மூடப்பட்டது. வாகனங்கள் பாலத்திற்கு கீழ் உள்ள சாலை வழியாக திருப்பிவிடப்பட் டன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பரேலில் இருந்து தாதர் வரை பல கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். உடைந்த குழாயை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

பணி முடிந்த பிறகு தான் மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். 

மேலும் செய்திகள்