லிங்கன் சொன்ன யோசனை

ஆபிரகாம் லிங்கனிடம் புகார் செய்தவருக்கு லிங்கன் ஒரு யோசனை சொன்னார்.

Update: 2018-07-13 21:00 GMT
ஆபிரகாம் லிங்கனிடம் ஒருவர் புகார் செய்தார், ‘‘எனக்கு ஒருவன் சகிக்க முடியாத துன்பம் இழைத்து விட்டான். அந்தத் துன்பத்தை என்னால் மறக்க முடியவில்லை.’’ அதைக் கேட்ட லிங்கன், ‘‘நீங்கள் ஏன் அவருக்கு ஒரு கடிதம் எழுதக் கூடாது? எவ்வளவு கடுமையாக எழுத முடியுமோ அவ்வளவு கடுமையாக எழுதுங்கள்’’ என்று கூறி அனுப்பிவைத்தார். அவரும் தனக்கு துன்பம் இழைத்தவருக்கு காரசாரமாகக் கடிதம் எழுதி அதை லிங்கனிடம் எடுத்து வந்தார். ‘‘நீங்கள் சொன்னபடி கடுமையாக எழுதி இருக்கிறேன். இதை தபாலில் போட்டுவிடவா?’’ என்று கேட்டார். அதற்கு லிங்கன், ‘‘எழுதிய வரை சரி, தபாலில் சேர்க்க வேண்டாம். அதைக் கிழித்து எறிந்துவிடுங்கள், நடந்ததை மறந்துவிடுங்கள், அவரை மனமார மன்னித்துவிடுங்கள். உங்கள் சுமை குறைந்துவிடும்’’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்