பள்ளியில் படையெடுத்த பாம்புகள்; மாணவர்கள்- ஊழியர்கள் ஓட்டம்

ஹிங்கோலி மாவட்டம் பங்காரபோகெரே கிராமத்தில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து பள்ளி நேற்று முன்தினம் வழக்கம் போல் இயங்கி கொண்டிருந்தது.

Update: 2018-07-14 23:50 GMT
அவுரங்காபாத்,

பள்ளி மாணவர்களுக்கு சமையல் செய்யும் பணியில் பெண் சமையல் பணியாளர் ஈடுபட்டார். அவர் சமையல் செய்வதற்காக மரக்கட்டைகள் வைத்திருந்த இடத்திற்கு சென்றபோது அங்கு கொடிய வி‌ஷம் கொண்ட 2 பாம்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் சில மரக்கட்டைகளை அவர் எடுத்தபோது 58 பாம்புகள் சாரைசாரையாக நெளிந்து வெளியே வந்து கொண்டிருப்பதை பார்த்ததும் அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

இதனைக்கண்ட மாணவர்கள், ஊழியர்களும் பள்ளியை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் கம்புகளுடன் திரண்டு வந்து பாம்புகளை அடித்து கொல்ல முயன்றனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் பாம்புகளை அடிக்கவிடாமல் தடுத்தனர். அவர்கள் பாம்பு பிடிக்கும் ஊழியருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி 60 பாம்புகளையும் பிடித்து கண்ணாடி குவளையில் போட்டார். பின்னர் அந்த பாம்புகளை பள்ளி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைத்தது.

மேலும் செய்திகள்