88 அடியை தொட்டது பவானிசாகர் அணை

8 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை நீர்மட்டம் 88 அடியை தொட்டது.

Update: 2018-07-15 23:39 GMT
பவானிசாகர், 

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்று புகழ்பெற்றது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 120 அடியாகும்.

இதில் 15 அடி சேறு போக அணையின் உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணை நிரம்பியது. அதன் உபரிநீர் பவானி ஆற்றின் வழியாக பவானிசாகர் அணைக்கு வருகிறது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 86.46 அடியாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 88.21 அடியை தொட்டது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 611 கனஅடி தண்ணீர் வந்தது.
பவானி ஆற்றில் தொடர்ந்து 1000 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 11-1-2010 அன்று பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 88 அடியை தொட்டது. அதன்பின்னர் நேற்று அணை 88 அடியை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்