சேலத்திற்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

சேலத்திற்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2018-07-18 23:00 GMT
சேலம்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பின. இந்த அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படு கிறது. இந்தநீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.

அதன்படி நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். இதற்காக அவர் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

பின்னர் கோவையில் இருந்து கார் மூலம் சேலம் வந்தார். முன்னதாக சேலம் மாவட்ட எல்லையான சங்ககிரியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கலெக்டர் ரோகிணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் முதல்-அமைச்சர் கார் மூலம் சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று இரவு வந்தார்.

இதைத்தொடர்ந்து அவரது வீட்டு முன்பு சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், மனோன்மணியம், வெற்றிவேல், போலீஸ் டி.ஐ.ஜி.செந்தில்குமார், சூப்பிரண்டு ஜோர்ஜிஜார்ஜ், கமிஷனர் சங்கர், துணை கமிஷனர்கள் தங்கதுரை, சுப்புலட்சுமி, மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உள்பட அரசு அதிகாரிகள், அ.தி.மு.க.நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்