ஓடும் ரெயிலில் ஏற முயன்ற வங்கி காவலாளி தவறி விழுந்து பலி

திண்டிவனத்தில் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற வங்கி காவலாளி தவறி கீழே விழுந்து பலியானார்.

Update: 2018-07-19 21:45 GMT
திண்டிவனம்,

சென்னை எக்மோரில் இருந்து புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு திண்டிவனம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் அடுத்த சில நிமிடங்களில் அந்த ரெயில் புதுச்சேரி நோக்கி புறப்பட்டது. அந்த சமயத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைகளில் 2 பைகளுடன் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் ஓடும் ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த செங்கல்பட்டு ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த நபரின் சட்டை பையில் இருந்த அடையாள அட்டையை கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் விழுப்புரம் பூந்தோட்டம் ராம்நகர் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் புகழரசு(வயது 41) என்பதும், தற்போது காஞ்சீபுரம் மாவட்டம் அணைக்கட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்ததும் தெரிந்தது.

மேலும் அவர் நேற்று முன்தினம் வங்கி பணியை முடித்து விட்டு அணைக்கட்டில் இருந்து திண்டிவனம் வந்து, அங்கிருந்து விழுப்புரம் செல்ல ரெயிலில் ஏறியபோது தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், புகழரசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் 

மேலும் செய்திகள்