நாகை-சென்னைக்கு 2 புதிய அரசு பஸ்கள் இயக்கம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்

நாகை-சென்னைக்கு 2 புதிய அரசு பஸ்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-19 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் நாகையில் இருந்து சென்னை செல்லும் 2 புதிய அரசு பஸ்களை மக்கள் பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு, 2 புதிய பஸ்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களின் சார்பில் 515 புதிய பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இதில் நாகை மண்டலத்திற்கு 60 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் நாகை முதல் சென்னை வரையில் செல்லும் 2 புதிய பஸ்கள் இன்று (நேற்று) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தங்க.கதிரவன், வெளிப்பாளையம் பால் உற்பத்தி கூட்டுறவு வங்கித்தலைவர் சக்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், நாகை போக்குவரத்துகழக பொது மேலாளர்் தசரதன், துணைமேலாளர் (வணிகம்) ராஜா, கோட்ட மேலாளர் செந்தில்குமார், துணைமேலாளர் (தொழில்நுட்பம்) சிதம்பரகுமார், நாகை தாசில்தார் ராகவன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்