தடை காலம் 31-ந் தேதியுடன் முடிகிறது: மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்

குளச்சலில் மீன்பிடி தடை காலம் வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து மீன்பிடிக்க செல்ல தயாராகும் வகையில் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-07-19 22:45 GMT
குளச்சல்,

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமர மீனவர்களும் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்களில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று 10 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்புவார்கள். கட்டுமர மீனவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு மதியம் கரை திரும்புவார்கள்.

மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. இந்த காலக்கட்டத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதில்லை.

அதன்படி, குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விசைப்படகுகளில் சிறு- சிறு பழுதுகளை நீக்குதல், பெயிண்ட் அடித்தல் போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தடைக்காலம் வருகிற 31-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில், மீனவர்கள் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக வலைகளை சரி பார்த்தல், இரும்பு ரோப்புகளை சீரமைத்தல், விசைப்படகுகளில் பெயிண்ட் அடித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்