சேலத்திற்கு இன்று வருகை தரும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு - ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. அறிக்கை

சேலத்திற்கு இன்று வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Update: 2018-07-26 23:15 GMT
சூரமங்கலம்,

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை சேலம் விமான நிலையம் வருகிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

அதே போன்று நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு, சேலம் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரசு பொருட்காட்சியை திறந்து வைக்கிறார்.

30-ந்தேதி காலை சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலங்களில் 9 இடங்களில் ரூ.4 கோடியே 11 லட்சத்தில் பசுமை வெளி பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். எனவே இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட, பகுதி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாநகராட்சி உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்