கற்பழிப்பு வழக்கில் சிறுவனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனை ரத்து

கற்பழிப்பு வழக்கில் சிறுவனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை மும்பை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.

Update: 2018-07-30 00:08 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கடந்த 2013-ம் ஆண்டு 3 பேர் கற்பழித்து கர்ப்பமாக்கி உள்ளனர். போலீசார் 3 பேரையும் கைது செய்து செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந் தேதி செசன்ஸ் கோர்ட்டு 3 பேருக்கும் தலா 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து ஒருவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதில், 18 வயது நிரம்பாத சிறுவன் என தன்னை குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து, அவரது வயது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க செசன்ஸ் கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து செசன்ஸ் கோர்ட்டு தாக்கல் செய்த அறிக்கையில் அவருக்கு சம்பவத்தின் போது, 16 வயது 10 மாதங்கள் 18 நாட்கள் என அறிக்கை தாக்கல் செய்தது.

இதில், அவர் சிறுவன் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு கூறிய மும்பை ஐகோர்ட்டு அந்த சிறுவனுக்கு விதித்த 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்