அக்டோபர் மாதம் முதல் கருவூலங்களில் அனைத்து பணிகளும் காகிதமின்றி கணினி வழியாக நடைபெறும்

திருவாரூர் மாவட்டத்தில் வருகிற அக்டோபர் மாதம் முதல் கருவூலங் களில் அனைத்து பணிகளும் காகிதமின்றி கணினி வழியாக நடைபெறும் என கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.

Update: 2018-08-01 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட கணினி பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பயிற்சி குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சம்பளம் மற்றும் சம்பளம் சாரா பட்டியல்கள் தயாரித்தல், மின் பணி பதிவேடு பராமரித்தல், ஓய்வூதிய கருத்துருக்கள் தயாரித்தல் மற்றும் இதர இனங்கள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர் களுக்கும் பயிற்சியானது அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் அனைத்து பணிகளும் காகிதம் ஏது மில்லாமல் கணினி வழியாக மட்டுமே கருவூலங்களில் பட்டியல்கள் ஏற்பளிப்பு மற்றும் ஒப்பளிப்பு நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட கருவூல அலுவலர் லலிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்