போலீஸ்நிலையம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

அலங்காநல்லூர் போலீஸ்நிலையம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-05 22:15 GMT

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூரை அடுத்த கோட்டைமேடு ஊராட்சியை சேர்ந்தது பரளிகண்மாய். இதில் கோட்டைமேடு மற்றும் புதுப்பட்டி கிராமங்களுக்கு சுமார் 260 ஏக்கர் விவாசாய விளை நிலங்கள் இந்த கண்மாய்மூலம் பாசன வசதி பெறுகின்றன.இதற்கு முல்லை–பெரியாறு பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் கண்மாய்க்கு நீர் வரும் பாதையில் தனிநபர்கள் தடுப்பணை அமைத்து நீரினை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் கண்மாய்க்கு வரவேண்டிய தண்ணீர் முழுமையாக வரவில்லை.இதனால் கண்மாய் பாசன விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பாசன விவசாயிகள் மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

மேலும் தடுப்பணைகள் அமைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க லியுறுத்தி அலங்காநல்லூர் போலீஸ் நிலையம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.இதைதொடர்ந்து விவசாயிகள் புகார் மனுவை கொடுத்துவிட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்