ராணுவ நிறுவனத்தில் 494 தொழில்நுட்ப பணியிடங்கள்

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு 494 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Update: 2018-08-06 08:10 GMT
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனம் சுருக்கமாக டி.ஆர்.டி.ஓ. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில் “சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட்-பி” பணியிடங்களை நிரப்ப “செப்டம்” எனப்படும் நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் 494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப்பிரிவினருக்கு 260 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 130 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 68 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 36 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுடையவர்களாக இருக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

டிப்ளமோ என்ஜினீயரிங் அல்லது ஏதேனும் ஒரு அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக் கலாம்.

கட்டணம்

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் தவிர்த்த மற்றவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 29-8-18-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.drdo.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்