விமான நிலைய கழிவறையில் ரூ.65 லட்சம் கடத்தல் தங்கத்தை மறைத்து வைத்தவர் கைது

விமான நிலைய கழி வறையில் ரூ.65 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை மறைத்து வைத்தவா் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-08-07 22:36 GMT
மும்பை,

துபாயில் இருந்து நேற்று முன்தினம் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றார். இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே சுங்கத்துறையினர் அவர் கழிவறையைவிட்டு வெளியே வந்தவுடன் உள்ளே சென்று அங்கு இருந்த குப்பை தொட்டியில் சோதனை போட்டனர். அப்போது அங்கு இருந்து ரூ.65 லட்சம் மதிப்பிலான 20 தங்க கட்டிகள் மீட்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த தங்க கட்டிகளை குப்பை தொட்டியில் மறை த்து வைத்துவிட்டு தப்பிச் செல்ல முயன்ற பயணியை பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் நசீர் கான் (வயது35) என்பது தெரியவந்தது.

மற்றொரு சம்பவத்தில் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து அமெரிக்க டாலர் கடத்தி வந்த நவுசாத்(30) என்ற பயணியை சுங்கத்துறையினர் கைது செய்தனர். அதிகாரிகள் அவரிடம் இருந்து ரூ.22 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலரை பறிமுதல் செய்தனர்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் அதிகாரிகள் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்