சாலை பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது

மோட்டார் தொழிலை முடக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யக்கோரி சாலை போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-08-07 23:29 GMT

திருவாரூர்,

மோட்டார் தொழிலை முடக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யக்கோரி சாலை போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அனிபா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நிர்வாகிகள் மணிவண்ணன், ஜமால்முகமது, அட்சயா, ரவி, கண்ணன், ராஜ், பழனிவேல், கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சாலை போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்