பிளஸ்–2 தேர்வில் முதல் 2 இடம் பிடித்த முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை மாவட்ட கலெக்டர் தகவல்

உதவித் தொகையை பெற தகுதியானவர்கள் தங்களில் மதிப்பெண் பட்டியலுடன் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

Update: 2018-08-08 21:30 GMT

தூத்துக்குடி,

2017–18–ம் கல்வியாண்டில் பிளஸ்–2 பொதுத்தேர்வில் முன்னாள் படைவீரரின் சிறார்களில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 2–வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், அதே போல் மாநில அளவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், 2–வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.7 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

எனவே இந்த உதவித் தொகையை பெற தகுதியானவர்கள் தங்களில் மதிப்பெண் பட்டியலுடன் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்