சட்டசபை வளாகத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை

புதுவை சட்டசபை வளாகத்தில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2018-08-08 23:15 GMT

புதுச்சேரி,

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து புதுவை அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து புதுவை சட்டசபை வளாகத்தில் நேற்று கருணாநிதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்துக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் சென்னை புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்கள் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் செய்திகள்