திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.6,309-க்கு விலை போனது.

Update: 2018-08-09 22:30 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர்், குடவாசல், வலங்கைமான் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் திருவாரூர்் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் திருவாரூரை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 473 விவசாயிகள் பருத்தியை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.

பருத்தி பஞ்சுகளை ஏலம் எடுப்பதற்கு கோவை, பண்ருட்டி, கோவில்பட்டி, திருப்பூர், கும்பகோணம், நாகை போன்ற வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப தொகையை சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர்்.

இதனை தொடர்ந்து வேளாண் துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, விற்பனைக்குழு செயலாளர் சேரலாதன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சரண்யா ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்். இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6,309-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5,659-க்கும், சராசரியாக ரூ.6,134-க்கும் விலை போனது. ஏலத்தில் 657.53 டன் பருத்தி விற்பனை யானது. இதன் மதிப்பு ரூ.40 லட்சமாகும். 

மேலும் செய்திகள்