போலீசாரிடம் ரகளை செய்த மருத்துவ கல்லூரி மாணவி கைது

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு போலீசாரிடம் ரகளை செய்த மருத்துவ கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-08-10 22:59 GMT
மும்பை,

சயான்- பன்வெல் நெடுஞ்சாலையில் சம்பவத்தன்று நவிமும்பை காமோத்தே பகுதியில் இளம்பெண் ஒருவர் காரை தாறுமாறாக ஓட்டினார். திடீரென அந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியது.

இதுபற்றி அந்த காரை ஓட்டி வந்தவர் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரிடம் சென்று முறையிட்டார்.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த இளம்ெபண்ணை காரில் இருந்து இறங்கும்படி கூறினார். ஆனால் அவர் இறங்க மறுத்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.

இதுபற்றி காமோட்டே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பெண் போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். இதில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த இளம்பெண் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த இளம்பெண் பெண் போலீசாரிடமும் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தார். இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை கைது செய்தனர்.

விசாரணையில், அவரது பெயர் ராதா (வயது24) என்பதும், மருத்துவ கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது. விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. 

மேலும் செய்திகள்