மத்திய ரெயில்வே மோட்டார் மேன்கள் திடீர் போராட்டம்

கூடுதல் நேரம் பணி செய்ய மறுத்து மத்திய ரெயில்வே மோட்டார் மேன்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-10 23:28 GMT
மும்பை,

போராட்டம் காரணமாக ரெயில்கள் தாமதமாக இயங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

மும்பையில் ரெயில் போக்குவரத்து பொதுமக்களின் உயிர் நாடியாக உள்ளது. தினமும் சுமார் 80 லட்சம் பேர் மின்சார ரெயிலில் பயணம் செய்கின்றனர். இந்தநிலையில் ஆள்பற்றாக்குறை காரணமாக மின்சார ரெயில் மோட்டார் மேன்களுக்கு கூடுதல் நேரம் பணி ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால், காலி பணியிடங்களில் புதிய மோட்டார் மேன்களை நியமிக்க வலியுறுத்தி நேற்று மத்திய ரெயில்வேயில் மோட்டார் மேன்கள் கூடுதல் நேரம் பணி செய்வதை தவிர்த்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நேற்று மத்திய ரெயில்வேயில் சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. வேலை முடிந்து வீடு திரும்பும் மாலை நேரம் என்பதால் ரெயில் நிலையங்களில் கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது. வழக்கத்தை விட மின்சார ரெயில்கள் 10 நிமிடம் மற்றும் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஒவ்வொரு ரெயில்களிலும் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறினார்கள். மேலும் வாசற்படியில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்ெகாண்டதையும் காண முடிந்தது.

மேலும் செய்திகள்