செட் டாப் பாக்ஸ் வழங்க மறுக்கும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது புகார் தெரிவிக்கலாம் - கலெக்டர் ஷில்பா அறிவிப்பு

அரசு செட்டாப் பாக்ஸ் வழங்க மறுக்கும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஷில்பா அறிவித்துள்ளார்.

Update: 2018-08-11 21:36 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் ஆபரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க போதுமான செட்டாப் பாக்ஸ்கள் கையிருப்பு உள்ளன. பொதுமக்கள் ஆதார் நகலை அந்தந்த பகுதி கேபிள் ஆபரேட்டர்களிடம் வழங்கி அரசு செட்டாப் பாக்ஸ் பெற்றுக் கொள்ளலாம்.

அரசு செட்டாப் பாக்ஸ் வழங்க மறுக்கும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது புகார் 0462-2330080 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் புகார் தெரிவிக்கலாம். மேலும் துணை மேலாளர் அல்லது தனி தாசில்தார், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தாட்கோ வணிக வளாகம், எஸ்.என்.ஹைரோடு நெல்லை என்ற முகவரியில் நேரில் வந்து புகார் தெரிவிக்கலாம்.

அரசு செட்டாப் பாக்ஸ்கள் குறித்த உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுமக்களிடம் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அதை பொது மக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்