மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு, கலெக்டரிடம் புகார்

மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்திற்கு முறைகேடாக நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்து முறையான தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாடானை தாலுகா பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

Update: 2018-08-12 22:15 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா நம்புதாளை விநாயகர் நகர் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்திற்கு நிர்வாக குழு உறுப்பினர் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்படிருந்தது. அதன் அடிப்படையில் 7 நபர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ததற்கான எந்தவித ஒப்புகை சீட்டும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 9–ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடத்தாமலேயே இந்த சங்கத்திற்கான நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் நம்புதாளை விநாயகர் நகர் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்திற்கு முறைகேடாக நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்து முறையான தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்