விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி இந்து முன்னணியினர் மனு

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி இந்து முன்னணியினர் ஊர்வலமாக அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-08-27 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடன் உதவி, வேலை வாய்ப்பு, வீட்டு மனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 341 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து மாவட்ட வருவாய் அதிகாரி பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவதற்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஊர்வலமாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் மனு கொடுக்க அனைவரும் செல்ல அனுமதி இல்லை என்றும், ஒரு சிலர் மட்டுமே சென்று மனு அளிக்குமாறும் கூறினர். ஆனால் போலீசாரை கண்டித்து இந்து முன்னணியினர் கோஷங்களை எழுப்பியதால், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பணி செய்து கொண்டிருந்த தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூங்கோதை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு சென்று இந்து முன்னணியினரிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். 

மேலும் செய்திகள்