முத்தியால்பேட்டை மார்க்கெட்டில் 44 பேருக்கு கடைகள் நாராயணசாமி ஒதுக்கீட்டு ஆணை வழங்கினார்

முத்தியால்பேட்டை மார்க்கெட்டில் 44 பேருக்கு கடைகள் ஒதுக்குவதற்கான ஆணையை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

Update: 2018-09-14 01:15 GMT
புதுச்சேரி,

முத்தியால்பேட்டையில் பழமை வாய்ந்த மார்க்கெட் உள்ளது. மோசமான நிலையில் இருந்த இந்த மார்க்கெட் நீண்ட கால போராட்டத்துக்குப்பின் புதியதாக கட்டப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இந்த மார்க்கெட் திறந்துவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள மீன் அங்காடி மட்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்தநிலையில் தற்போது மற்ற கடைகளும் பயன்பாட்டிற்கு விடப்பட உள்ளன. இதற்காக 44 பயனாளிகளுக்கு கடைகள் ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற கமிட்டி அறையில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி பயனாளிகளுக்கு கடைகள் ஒதுக்கீட்டு ஆணையையும், சாவியையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வையாபுரி மணிகண்டன், தீப்பாய்ந்தான், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன், புதுவை நகராட்சி ஆணையர் சுதாகர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்