கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி குணசேகரன் எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்

திருப்பூரில் தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

Update: 2018-09-14 22:26 GMT
திருப்பூர், 

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருப்பூர் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இவர்களுக்கு புதிய தாம்பூல தட்டுடன் புடவை, வளையல்கள் மற்றும் குங்கும சிமிழ் அடங்கிய தொகுப்பு பொருட்களும் வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள் குறித்து ஆலோசனை வழங்கவும், கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் மையமும் அமைக்கப்பட்டிருந்தது. முடிவில் கர்ப்பிணிகளுக்கான 5 வகையான கலவை சாதம் வழங்கப்பட்டது. இதில் திருப்பூர் மேற்பார்வையாளர் பத்மாவதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்