11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் மும்பை மாநகராட்சி கூடுதல் கமிஷனராக சஞ்சய் சேத்தி நியமனம்

11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மராட்டிய அரசு பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. மும்பை மாநகராட்சி கூடுதல் கமிஷனராக சஞ்சய் சேத்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2018-09-15 23:06 GMT
மும்பை, 

11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மராட்டிய அரசு பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. மும்பை மாநகராட்சி கூடுதல் கமிஷனராக சஞ்சய் சேத்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

மராட்டிய அரசு நேற்று 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. இவர்களில் மாநில தொழில் மேம்பாட்டு கழக தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சஞ்சய் சேத்தி மும்பை மாநகராட்சியின் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை சங்கத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த கோவிந்த ராஜ் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை கமிஷனராகவும், ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை சங்கத்தின் நிர்வாகஇயக்குனராக கவிதா குப்தாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மும்பை மாநகராட்சி கூடுதல் கமிஷனராக இருந்த சஞ்சய் முகர்ஜி மருத்துவ கல்வி மற்றும் மருந்து துறை செயலாளராக மாற்றப்பட்டு உள்ளார்.

சுற்றுச்சூழல் துறை இயக்குனர்

மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனராக இருந்த பரிமள் சிங், சிறப்பு விற்பனை வரி கமிஷனராகவும், வேலைவாய்ப்பு, மாநில காப்பீட்டு திட்ட கமிஷனராக இருந்த யாசோத் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு துறை கமிஷனராகவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை கமிஷனராக இருந்த ரவேந்தி ரன் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலா ளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சுற்றுச்சூழல் துறை இயக்குனராக பி.என்.பாட்டீல் நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோல மேலும் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்