பாளையங்கோட்டையில் விநாயகர் சிலைகளுடன் சிறுவர்கள் ஊர்வலம்

பாளையங்கோட்டையில் நேற்று விநாயகர் சிலைகளுடன் சிறுவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2018-09-15 23:13 GMT
நெல்லை,

பாளையங்கோட்டையில் நேற்று விநாயகர் சிலைகளுடன் சிறுவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

விநாயகர் சதுர்த்தி 

நெல்லையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பிலும் மற்றும் அமைப்புகள் சார்பிலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில் மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோவில் முன்பு வைக்கப்பட்ட விநாயகர் சிலை நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

நேற்று மாலை மேளதாளம் முழங்க வீதிகளில் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இரவில் இந்த சிலை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதையொட்டி சிலை ஊர்வல பகுதியில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சிறுவர்கள் ஊர்வலம் 

இதே போல் பாளையங்கோட்டை சிவன் கோவிலில் களிமண்ணில் செடி விதைகளை கலந்து செய்யப்பட்ட 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிலைகள் பூந்தொட்டியில் வைத்து நேற்று குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்கு வழங்கப்பட்டது. அதனை அவர்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று 8 ரதவீதிகளில் சுற்றி வந்தனர். பின்னர் அந்த சிலைகளை அவரவர் வீட்டுக்கு எடுத்துச்சென்று பூந்தொட்டிக்குள் சிலையை தண்ணீர் ஊற்றி கரைத்தனர்.

மேலும் செய்திகள்