விநாயகர் சிலை ஊர்வலம் எச். ராஜா தொடங்கி வைத்தார்

கூத்தாநல்லூரில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை எச்.ராஜா தொடங்கி வைத்தார்.

Update: 2018-09-16 21:45 GMT
கூத்தாநல்லூர், 


திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது. கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி விநாயகர் சிலை ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜனதா மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், திருவாரூர் மாவட்ட தலைவர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் தோட்டச்சேரி, கம்பர்தெரு, புதிய பஸ் நிலையம், ஏ.ஆர்.ரோடு, கூத்தாநல்லூர், மரக்கடை வழியாக சென்று வெண்ணாற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. வீதி உலாவையொட்டி கூத்தாநல்லூர் நகரம் முழுவதும் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்