அண்ணா பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அரியலூர் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது. சைக்கிள் போட்டி 13, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்பட்டது.

Update: 2018-09-16 22:45 GMT
அரியலூர்,

சைக்கிள் போட்டியை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரியலூர் மாவட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் 292 பேரும், மாணவிகள் 98 பேரும் பங்கேற்றனர்.

13 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் அரியலூர் ஆர்.சி.நிர்மலா காந்தி நடுநிலைப்பள்ளி மாணவன் கார்த்திக், 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் நித்தீஸ்வரன், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சாமுவேல் டேனியல் ஆகியோர் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.

13 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா, 15 வயதிற்குட்பட்ட பிரிவில் குணமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி நந்தினி, 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜானகி ஆகியோர் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.

இதையடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நான்காம் இடம் முதல் 10-வது இடம் வரை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஆறுதல் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்