அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 8 பேர் கைது

அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-16 22:30 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் அடிதடி, வழிப்பறி, குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய, தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் வேலூர் மாவட்டத்தில் 8 காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் கடந்த 2017-ம் ஆண்டு அடிதடி, வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருக்கும் நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், 50 பேர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவானவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். 8 பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 42 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்