தடுப்பணையில் இறந்து கிடந்த மான் வனத்துறையினர் விசாரணை

சீர்காழி அருகே தடுப்பணையில் மான் ஒன்று இறந்து கிடந்தது. அந்த மான் வேட்டையாடப்பட்டதா? என்பது பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-09-18 21:30 GMT
சீர்காழி, 


நாகை மாவட்டம் சீர்காழி அருகே தென்னலக்குடி பகுதியில் கூப்பிடுவான் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் தற்போது தண்ணீர் அதிகளவு தேங்கி உள்ளது. இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மான்கள் சுற்றி திரிகின்றன. இந்த மான்கள் தடுப்பணையில் தண்ணீர் குடிக்க வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மான் ஒன்று தடுப்பணையில் இறந்து கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று தடுப்பணையில் இறந்து கிடந்த மானை அப்புறப்படுத்தினர். தண்ணீர் குடிக்க வந்தபோது தவறி விழுந்து மான் இறந்ததா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என்பது பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்