விருதுநகரில் தமிழக அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் தி.மு.க.வினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் 4 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-09-18 23:00 GMT
விருதுநகர்,

கடந்த 8–ந்தேதி சென்னையில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், பெட்ரோல்–டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் 18–ந்தேதி (நேற்று) நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி விருதுநகரில் நேற்று தேசபந்துதிடலில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குட்கா ஊழலை கண்டித்தும், அதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பெட்ரோல்–டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தி.மு.க.வினர் கோ‌ஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர்ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜகுரு, பொதுக்குழு உறுப்பினர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்