சோலைவனமாக மாறிய பாலைவனம்!

பாலைவனம் என்றாலே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணற்பரப்பாகத்தான் காட்சி அளிக்கும். ஆனால் அரிதாக சில பாலைவன பூமிகள் வருடத்தில் சில காலம் எழிற்கோலம் பூணுவது உண்டு.

Update: 2018-09-22 05:21 GMT
தென்ஆப்பிரிக்காவின் மேற்கு கடல் படுகை நெடுக அமைந்துள்ள பாலை நிலம் வண்ண மயமாக மாறுகிறது. இங்கு ஒவ்வொரு வசந்த காலத்திலும் சில வாரங்கள் காட்டுப்பூக்களால் கம்பளம் விரித்தது போல, கலைடாஸ்கோப் காட்சி போல வண்ணமயமாக மாறிவிடுகிறது.

இந்த அழகிய பூக்கள் பாலை வனங்களிலும், உலக அளவிலுள்ள வறண்ட நிலங்களிலும் மலர்கின்றன.

வசந்த காலத்தில் தென்ஆப்பிரிக் காவில் பூக்கள் மலர்வதைப் போல ஒரு சில நாடுகளில் மட்டுமே நடக்கிறது.

ஜூலை மாத இறுதியில் தொடங்கி, செப்டம்பர் மாத முடிவு வரை இந்த மலர்கள் ஆண்டுதோறும் சில வாரங்கள் பூத்துக்குலுங்குகின்றன.

ஆண்டில் முதல்முறையாக வெப்பக்காற்று வீசும்போது இவை வாடிவிடும். அதிலிருந்து விழும் விதைகள் கோடைகால வெப்பத்தில் உலர்ந்து, அடுத்த ஆண்டு மழைக்காலம் வரை அப்படியே கிடக்கும். மழைக்காலத்தில் உயிர்ப்பெறும் இவை, வசந்த காலத்தில் பூத்துச் சிரிக்கும்.

இந்த அழகிய இயற்கை நிகழ்வை புகைப்படக்கலைஞர் டாம்மி டிரென்சார்டு படம் பிடித்திருக்கிறார்.

தென்ஆப்பிரிக்காவின் பியேடவ் பள்ளத்தாக்கில் தன்னுடைய மனைவி யோடு ஆண்டு விடுமுறையைக் கழித்தபோது யதேச்சையாக இந்த கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்த டிரென்சார்டு, ‘இது ஓர் அழகான கனவுக் காட்சி’ என்கிறார்.

‘குறைவான நாட்களே இருக்கின்ற இந்த இயற்கையின் காட்சி, எல்லா வற்றையும்விட சிறப்பாக உள்ளது. பொதுவாக தென்ஆப்பிரிக்கா, காட்டு விலங்குகளைப் பார்க்கும் இடம் என்று மக்கள் நினைக் கிறார்கள். காட்டு விலங்குகளைப் பார்வையிடுவதற்குப் போட்டியாக இந்த காட்டுப்பூக்களின் காட்சி அமைந்திருக்கிறது’ என்று டிரென்சார்டு சிலிர்ப்போடு சொல்கிறார்.

இயற்கை பல அதிசயமான அழகுகளை தன்னகத்தே கொண்டுள்ளது!

மேலும் செய்திகள்