மும்பை கடற்கரைகளில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு

விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு 7-வது நாளான கடந்த 19-ந் தேதி ஏராளமான சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.

Update: 2018-09-22 22:47 GMT

மும்பை,

சிலைகள் கடலில் கரைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மறுநாள் ஜூகு, வெர்சோவா, தாதர், ஒர்லி, கிர்காவ் போன்ற கடற்கரைகளில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்து கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். மேலும் ஊழியர்களை கொண்டு கடற்கரையில் மிதந்து கிடந்த மீன்களை அப்புறப்படுத்தினர்.

இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிளாஸ்டர் ஆப் பாரிஸ்சால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலையில் வண்ணப்பூச்சுகள் பூசப்படுகிறது. இதனால் கடலில் கரைக்கப்படும் சிலைகள் அனைத்தும் வண்ணப்பூச்சுகளில் குரோனியம், அலுமினியம் போன்ற ரசாயனங்கள் தண்ணீரில் கரைந்து போகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு சுவாசிக்க தண்ணீரில் ஆக்சிஜன் குறைந்து போவதால் மீன்கள் செத்து கரை ஒதுங்கி உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்