சேலத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சரை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம்

சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

Update: 2018-09-22 23:22 GMT
சேலம்,

ஈழத்தமிழர் படுகொலைக்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தான் காரணம் என்று கூறி அதை கண்டித்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

இதற்காக சேலத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் சேலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு பன்னீர்செல்வம் எம்.பி. தலைமை தாங்கினார். சக்திவேல் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் சரவணன், யாதவமூர்த்தி, சண்முகம், மாநகர் மாவட்ட துணை செயலாளர் பாலு, அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ஜான்கென்னடி மற்றும் நிர்வாகிகள் பவானி சந்துரு, அசோக்குமார், செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்