திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதி தூக்க மாத்திரை தின்று தற்கொலை முயற்சி

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதியினர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-09-24 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய சந்தைப்பேட்டை காமராஜ் தெருவை சேர்ந்தவர் தெட்சிணாமூர்்த்தி. மாற்றுத்திறனாளியான இவர், ஆதிச்சபுரம்் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்். இவரது மனைவி சித்ரா. இவரும் மாற்றுத்திறனாளியாவார். திருத்துறைப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்ரா, பல்நோக்கு மருத்துவ பணியாளராக பணிபுரிந்து வருகிறார்்.

மாற்றுத்திறனாளி தம்பதியினர் இருவரும் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திடீரென இருவரும் மயங்கி விழுந்தனர்.

அப்போது அவர்கள், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் தாங்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டதாக தெரிவித்தனர். உடனடியாக அங்கு இருந்தவர்கள், அவர்களை கையில் வைத்திருந்த மனுவை வாங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் மயங்கிய நிலையில் இருந்த தம்பதியரை போலீசார் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை செய்து கொள்ள முயன்ற தம்பதியினர் அளித்த மனுவில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சித்ராவிற்கு சில டாக்டர்்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும், இதனை சித்ரா கண்டித்ததால் அந்த டாக்டர் கள், சித்ராவின் ஊனம் பொய்யானது என்றும், அவரை மீண்டும் பரிசோதிக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாகவும், இதன் அடிப்படையில் சில டாக்டர்்கள் சித்ராவை அத்துமீறி சோதனை செய்ததாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், டாக்டர்களின் தொல்லையை பொறுக்க முடியாததால் மனமுடைந்த தாங்கள் இருவரும் இத்தனை அவமானத்திற்கு பிறகும் தங்களால் வாழ பிடிக்கவில்லை. எனவே சாகபோவதாகவும் தங்களுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையின் நிலை என்ன என்பது கவலையாக உள்ளது. தங்களது நிலை யாருக்கும் வரக்கூடாது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் எனவும் அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர். திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதியினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்