போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாறுதல்; தாசில்தார் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு

போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாறுதலுக்கு உத்தரவிட்ட தாசில்தார் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-30 23:00 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ளது பிடாரேனந்தல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி வயது (வயது 77). இவர் கடந்த 2006–ம் ஆண்டு தேவகோட்டை சருகணி சாலையில் 7 பேருக்கு பாத்தியப்பட்ட நிலத்தை விலைக்கு வாங்கியிருந்தார். அந்த 7 பேரில் சுப்பையா மகன் பூசாரி என்பவரும் ஒருவர்.

இந்தநிலையில் சாத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர், அவரது தந்தை பெயர் பெரியான் மகன் பூசாரி என்று இருப்பதை பயன்படுத்தி, பழனிச்சாமி வாங்கிய நிலத்தை, தனது பெயருக்கு அதிகாரிகள் உதவியுடன் பட்டா மாறுதல் செய்து கொண்டாராம்.

இதை அறிந்த பழனிசாமி, தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், வக்கீல் சேந்தனி கண்ணதாசன் மூலம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாறுதல் செய்து கொண்ட முருகேசன், அவருடைய மனைவி பாண்டிமுத்து, பட்டா மாறுதல் உத்தரவு கொடுத்த தேவகோட்டை தாசில்தார் பகவதி, சர்வேயர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தேவகோட்டை தாலுகா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்