ஹூக்கா பார்லருக்கு தடை : மீறினால் ரூ.1 லட்சம் அபராதம், 3 ஆண்டு ஜெயில்

மராட்டியத்தில் ஹூக்கா பார்லருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதியை மீறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம், 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

Update: 2018-10-06 22:48 GMT
மும்பை,

மும்பை கமலா மில் வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கர தீ விபத்திற்கு வளாகத்தில் செயல்பட்டு வந்த ஹூக்கா பார்லர் தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்லருக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம், இதுதொடர்பாக மாநில சட்டசபையின் 2 அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில் அந்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உள்ளார்.

இதன் மூலம் மராட்டியத்தில் ஹூக்கா பார்லருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஹூக்கா பார்லர் நடத்துபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

மேலும் செய்திகள்