ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம்

பெரம்பலூரில் தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், புறநகர் பஸ்நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.

Update: 2018-10-10 22:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், புறநகர் பஸ்நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் அகஸ்டின், தர்ணா போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கருத்துரை ஆற்றினர். போராட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கேற்ப ஓய்வூதியத்தை வருமான வரிச் சட்டத்தின் கீழ் இணைக்கக் கூடாது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற அனைவரையும் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்