நெல்லையில் தாமிரபரணி புஷ்கர விழா கொடியேற்றம்

நெல்லையில் தாமிரபரணி புஷ்கர விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. தைப்பூச மண்டப படித்துறையை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

Update: 2018-10-10 21:30 GMT
நெல்லை, 


அகில பாரத துறவியர் சங்கம் மற்றும் தாமிரபரணி புஷ்கரம் 2018- என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்படுகின்ற தாமிரபரணி புஷ்கர விழாவிற்கான கொடியேற்று விழா நெல்லை சந்திப்பு சங்கீத சாபவில் நேற்று நடந்தது. இதில் ராமானந்தா சுவாமிகள், பக்தானந்தா சுவாமிகள், வேதானந்தா சுவாமிகள், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு வருகின்றவர்களுக்கு இந்த அமைப்பின் சார்பில் அன்னதானம் நடத்தப்படுகிறது.

மேலும் நெல்லை சந்திப்பு தைப்பூசமண்டப படித்துறையில் புஷ்கர விழா அனுமதி அளித்ததையொட்டி அந்த மண்டபத்தை சுத்தப்படுத்தும் பணியில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். மேலும் தைப்பூச மண்டப படித்துறை, குறுக்குத்துறை, குட்டத்துறை படித்துறைகளில் ரப்பர் படகுகளுடன் தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். 

மேலும் செய்திகள்