தனியார் நிறுவன மேலாளரை கொல்ல முயன்றவருக்கு 7 ஆண்டு ஜெயில் : தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

தூத்துக்குடி அருகே தனியார் நிறுவன மேலாளரை கொலை செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2018-10-12 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் குடிநீர் விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 10-10-15 அன்று கம்பெனி முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு, அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் மகன் விமல்ராஜ்(34) என்பவர் வந்தார்.

அவர் கம்பெனியை மூடுமாறு கூறி சுப்பிரமணியத்திடம் தகராறு செய்தார்.

தொடர்ந்து ஆத்திரம் அடைந்த விமல்ராஜ், தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டிக் கொலை செய்ய முயன்றார்.
இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள் குற்றம் சாட்டப்பட்ட விமல்ராஜிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். 

மேலும் செய்திகள்