தேசிய பேரிடர் குறைப்பு நாளையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூர் கோட்டை காந்திசிலை அருகே விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2018-10-13 22:15 GMT
வேலூர்,

வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தேசிய பேரிடர் குறைப்பு நாளையொட்டி நேற்று வேலூர் கோட்டை காந்திசிலை அருகே விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் அண்ணாசாலை வழியாக நேதாஜி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து விளையாட்டு மைதானத்தில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பார்த்தனர்.

இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், உதவி கலெக்டர் மேகராஜ், மாநகராட்சி கமிஷனர் விஜயகுமார், பேரிடர் மேலாண்மை தாசில்தார் சச்சிதானந்தன், தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாசலம், நிலைய அலுவலர் விநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்