மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை கரூரில் சரத்குமார் பேட்டி

மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை கரூரில் சரத்குமார் பேட்டி.

Update: 2018-10-14 22:30 GMT
கரூர்,

கரூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக மத்திய பா.ஜ.க. அரசு தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. அதனை மக்களின் வங்கி கணக்கில் செலுத்திவிட்டார்களா?. மக்களின் எதிர்பார்ப்புகள் எதையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. ரூ.15 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்தும் வாக்குறுதியை பா.ஜ.க. கூறவில்லை என்று எச்.ராஜா சொல்கிறார். நெடுஞ்சாலை பணிகள் டெண்டர் விவகாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. தொடர்ந்த வழக்கில் அவர் மீதான குற்றசாட்டில் முகாந்திரம் உள்ளதா? என்று விசாரிக்க தான் சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முகாந்திரம் இருக்கிறதா?, இல்லையா? என்று சி.பி.ஐ. சொல்லட்டும். அதற்கு பிறகு கருத்து சொல்கிறேன். தமிழக அரசு ஊழல்செய்கிறது என்றால் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள். பாடகி சின்மயி பல ஆண்டுகளுக்கு பிறகு கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டை சுமத்தியுள்ளார். காலம் கடந்து அவர் இந்த புகாரை கூறியிருந்தாலும், அவரது தைரியத்தை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்