கயிற்றால் கழுத்தை இறுக்கி ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர் கொலை மனைவி கைது

கலபுரகியில் குடிபோதை யில் தகராறு செய்ததால் கயிற்றால் கழுத்தை இறுக்கி ஓய்வுபெற்ற தனி யார் நிறுவன ஊழியரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்த னர்.

Update: 2018-10-15 21:30 GMT
கலபுரகி,

கலபுரகி மாவட்டம் சகாபாத் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பந்கோரா கிராமத் தைச் சேர்ந்தவர் ராஜேந்திர கவுடா(வயது 64). இவரது மனைவி ராஜேஸ்வரி(58). ராஜேந்திர கவுடா தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் அவர் மதுஅருந்திவிட்டு குடிபோதை யில் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் சண்டை போட்டு அடித்து, உதைத்து தாக்கி வந்ததாக தெரிகிறது. இதனால் மதுஅருந்தும் பழக்கத்தை கைவிடும்படி ராஜேந்திர கவுடாவிடம் ராஜேஸ்வரி கூறி வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக் குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு மதுஅருந்திவிட்டு ராஜேந்திர கவுடா வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் குடிபோதையில் இருந்த அவர் மனைவியுடன் தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி வீட்டில் கிடந்த கயிற்றை எடுத்து கணவர் ராஜேந்திர கவுடாவின் கழுத்தை இறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

பின்னர் கணவரை கொலை செய்து விட்டது பற்றி அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்களிடம் ராஜேஸ்வரி கூறியதாக தெரிகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக சகாபாத் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீ சார் விரைந்து வந்து ராஜேந்திர கவுடாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது குடிபோதையில் ராஜேந்திர கவுடா தொடர்ந்து தகராறு செய்து வந்ததால், அவரை ராஜேஸ்வரி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சகாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரியை கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்