நாகையில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு சுகாதாரமாக பராமரிக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

நாகையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் டீக் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு செய்தார்.

Update: 2018-10-26 22:00 GMT

நாகப்பட்டினம்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் டெங்கு குறித்து விழிப்புணர்வு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் செல்வராஜ் உத்தரவின்பேரில், நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஓட்டல்களை சுற்றியுள்ள பகுதிகளை சுகாதாரமாக பராமரிக்கவும், தண்ணீர் தேங்கி கொசு புழுக்கள் வளர வாய்ப்புள்ள தேங்காய் ஓடு, டீக்கப்புகள், டப்பாக்கள் ஆகியவற்றை உடனே அப்புறப்படுத்தவும் ஓட்டல் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்