இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு

மீன் பிடிக்கச்சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படைனர் சிறை பிடித்தனர்.

Update: 2018-10-29 22:45 GMT

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 400–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது குட்டி ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் தமிழக படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லுமாறு மைக் மூலம் எச்சரித்தனர்.

மேலும் ஒரு சில படகுகளை சுற்றிவளைத்து அதில் இறங்கி மீனவர்களை தாக்கியதுடன், மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாக தெரியவருகிறது.

பின்னர் தங்கச்சிமடம் கிறிஸ்துராஜ் என்பவருக்கு சொந்தமான படகையும், அதில் இருந்த 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

பின்னர் இலங்கையில் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமுக்கு 7 மீனவர்களையும் அழைத்து சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்