மண்டல அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிலம்ப போட்டி 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பெரம்பலூரில், மண்டல அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிலம்ப போட்டிகளில் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Update: 2018-11-01 22:30 GMT
பெரம்பலூர், 

பள்ளிக்கல்வித்துறை மற்றும் உடற்கல்வித்துறை ஆகியவற்றின் சார்பில் மண்டல அளவிலான மாணவ, மாணவிகளுக்கான சிலம்ப போட்டி பெரம்பலூர் ஆருத்ரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. போட்டியை பள்ளியின் இயக்குனர் செந்தில்குமார், முதல்வர் மலர்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போட்டியில் பெரம்பலூர், அரியலூர், உடையார்பாளையம், கரூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டிகள் 14, 17, 19 வயது என 3 பிரிவுகளாக தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் முதல் 4 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் முதல் இடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான சிலம்ப போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்